A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter ஃபெயின்மன் அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அனார் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அழகியசிங்கர் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகன் இரா.முருகவேள் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் என்.சொக்கன் என்.ராமதுரை எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுஜாதா சுந்தர ராமசாமி சுனில் ஜோகி சுப்புடு சுவாமி விவேகானந்தர் செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜீன் ஷார்ப் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பழ.அதியமான் பழ.கருப்பையா பவன் வர்மா பவா செல்லதுரை பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பெருமாள்முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மனுஷ்யபுத்திரன் மருதன் மலர்மன்னன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் வின்சென்ட் ஷீன் விளதீமிர் பகமோலவ் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்

18 Jun 2013

தியாக பூமி - அமரர் கல்கி

சிறப்புப் பதிவர்: சுசிலா ராமசுப்ரமணியன்

முன்குறிப்பு அல்லது முன்னெச்சரிக்கை: கதை சொல்லாமல் விமரிசனம் படைக்கச் சொல்லும் ஆசான்கள் இந்தப் பதிவைக் கடந்து போய்விடுதல் நலம். இது திறனாய்வு அன்று. நேற்று பார்த்த திரைப்படத்தை நண்பருடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றதொரு பகிர்வு. நன்றி.

ல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு போன்ற சரித்திர நாவல்களைப் படித்திருக்கிறேன். குறிப்பாக, பொன்னியின் செல்வனைப் பலமுறைகள் படித்தது உண்டு. கல்கியின் சமூக நாவல்களில் ’அலை ஓசை’ வாசித்தது உண்டு. தியாகபூமி’யை நீண்டகாலமாகத் தேடியது உண்டு; தியாகபூமி புத்தகத்தைச் சொல்கிறேன்.


நண்பர் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பும்போது வழக்கம்போல் கிரியின் கைகளில் அரை டஜன் புத்தகங்கள் இருந்தன (இந்த வரிகளை உங்களுக்காக இடைச் செருகியது; “உங்கள்” கிரி). தேவனின் மிஸ்டர்.வேதாந்தம், கல்கியின் தியாகபூமி இரண்டையும் ‘லபக்’ என்று படியேறுமுன் பிடுங்கிக் கொண்டேன். 

இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் எழுதப்பட்ட புதினம் தியாகபூமி. ஆனந்த விகடனில் கல்கி பணிபுரிந்தபோது படைத்த தொடர்கதை. நல்ல வர்த்தக சினிமா எடுக்கவல்ல கதை. அந்தக் காலத்திலேயே இதே தலைப்பில் திரைப்படம் ஒன்றும் வந்துள்ளதாகத் தெரிகிறது. சரியாக அந்தகாலத்து ரயில்வே ஸ்டேஷன் ஒன்றில் துவங்குகிறது திரைப்படம்; இல்லையில்லை புதினம். தஞ்சாவூர் ஜில்லாவின் நெடுங்கரை கிராமத்தில் 1918’ல் நடப்பதாகக் கதை.

சம்பு சாஸ்திரியின் மகள் சாவித்திரி. தந்தையுடன் பூஜை, புனஸ்காரங்கள், பஜனை, ஏழை எளியோருக்கு உதவி என்று ஒரு பக்கா கதாநாயகிக்கான அத்தனை குணாதிசயங்களும் கொண்டு வளைய வருகிறாள். அவளது சிற்றன்னை, சிற்றன்னையின் தாயார் என்று இருவரும் சொல்லத் தேவையில்லாமல் சாவித்திரியை அனைத்து விதங்களிலும் படுத்தியெடுக்கிறார்கள். 

மாடர்னான மணவாட்டியை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் ஸ்ரீதரன். சாவித்திரி ஒரு பட்டிக்காடு என்பது அறியாமல் அவளை ஸ்ரீதரன் மணக்க நேர்கிறது. இங்கேயும் சொல்லத் தேவையின்றி வரதட்சணை கேட்டல், தாலிகட்டும் கடைசி நேரத்தில் இன்னமும் உயர்த்திக் கேட்டல் என்ற குணாதிசயங்கள் கொண்ட ஸ்ரீதரனின் அம்மா.

(அந்த காலத்திலேயே) நான்குநாள் கல்யாணம், நான்காயிரம் வரதட்சணை எல்லாம் தாண்டி சித்தியிடமிருந்து விமோசனம் கிடைத்தது என்று நினைக்கும் சாவித்திரிக்கு தன் புகுந்த ஊரான கல்கத்தாவில் பேரதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. வழக்கமான அல்லல்கள், அவலங்கள், மாமியார் கொடுமைகள். 

கொடுமையின் உச்சமாக நிறைகர்ப்பிணியாக கல்கத்தாவிலிருந்து தன்னந்தனியே கிராமத்திற்குப் பயணப்படுகிறாள் சாவித்திரி. ஊருக்கு வந்தால் அடுத்த அதிர்ச்சி அவளுக்கு முன்னதாகவே அங்கே காத்திருக்கிறது. ஊரை வெள்ளம் சூழ்ந்தபோது வேற்று சாதியினருக்கு உதவியதற்காக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படும் சம்பு சாஸ்திரி மற்றும் குடும்பத்தினர் ஊரைக் காலி செய்துகொண்டு பட்டணம் செல்கிறார்கள்.

சாவித்திரிக்கு அக்ரஹாரம் அனுமதி மறுக்கிறது. சேரி உதவ வருகிறது. அவளும் பட்டணம் பயணிக்கிறாள். குழந்தை பிறக்கிறது. தன் குழந்தையை சம்பு சாஸ்திரியிடம் சேர்த்துவிட்டு சாவித்திரி உமாராணியாக உருமாறுகிறாள். சம்பு சாஸ்திரி தன் பேத்தி எனத் தெரியாமலேயே அந்தக் குழந்தையை வளர்க்கிறார். ”ஓ! ஒரு தென்றல் புயலாகி வருதே!” என்ற பின்னணிப் பாடல் இன்றி புரட்சிப் பெண்ணாக, நவநாகரிக மங்கையாக மாறுகிறாள் சாவித்திரி. காலம் கரைகிறது. ஸ்ரீதரன் தமிழகம் வருகிறான். உமாராணியை அடையாளம் காண்கிறான். தன்னுடன் மறுபடி சாவித்திரி சேர்ந்து வாழ வேண்டும் என கோர்ட்டுக்குப் போகிறான். 

கோர்ட் சொன்ன தீர்ப்பு என்ன? இறுதியில் சாவித்திரி என்ன முடிவு எடுக்கிறாள்; ஸ்ரீதரனுடன் சேர்ந்தாளா? சம்பு சாஸ்திரி தன் மகளை மறுபடி சந்தித்தாரா? இவற்றை வெள்ளித்திரையில்.... இல்லையில்லை கடைசி அத்தியாயத்தில் வாசிப்பீர்.

கதையின் மிகக் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் “நல்லான்”. சம்பு சாஸ்திரியின் அந்தரங்க உதவியாளன். சம்பு சாஸ்திரியின் சுக துக்கங்கள் அனைத்திலும் கடைசிவரைக் கூட இருக்கும் ’பெயருக்கு ஏற்றதொரு” நல்ல கதாபாத்திரம்.

சரி சரி, இத்தனை சொன்னபின் முடிவையும் சொல்லிவிடுவோம். மகாத்மாவின் அறப்போரில் நாயகனும் நாயகியும் இணைவதாக நிறைகிறது கதை.

கதை நமக்குப் பழகிய கதை என்றாலும் அமரர் கல்கியின் சொக்க வைக்கும் நடை நம்மைப் புத்தகத்துடன் அப்படியே கட்டிப்போடவல்ல ஒன்று என இந்தப் புத்தகமும் நிரூபிக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுப்பவர்கள் கடைசி அத்தியாயம் முடிக்கும் வரை புத்தகத்தைக் கீழே வைக்க மாட்டார்கள் என்பது நிச்சயம் (மேஜை மேல் வைப்பார்களா என்றெல்லாம் கேட்கக்கூடாது, ஆமாம்).

நல்ல எண்டர்டெயினிங் கதை வாசிக்க விரும்புபவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் வாசிக்கலாம். புனைவுகள் படைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து வித டிப்ஸ்களுக்கும் இந்தப் புத்தகத்தை அணுகலாம். கல்கி நிச்சயம் இந்த இரண்டு ரக வாசகர்களுக்கும் கேரண்டி தருகிறார்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று சம்பு சாஸ்திரி மூலமாக சொல்லும் ஆசிரியர், பெண் விடுதலை குறித்து சாவித்திரி வழியே சொல்கிறார். தேச விடுதலை பற்றின எண்ணங்களும் கதை நெடூகிலும் உண்டு. இந்தக் கதைக்கும் கதை திரைக்காவியமாகப் படைக்கப்பட்ட போது அதற்கும் அந்த காலத்துப் பொதுஜனங்கள் எப்படி வரவேற்பு தந்தார்கள் என்று தெரியவில்லை. 

தன் கணவனுடன் சேர்ந்து வாழ்வதுதான் சரி என்று, “நம் தேசத்திலேயே ஆதிகாலத்திலிருந்து எத்தனையோ பேர் தியாகம் செய்யவில்லையா? நம் தேசத்தை அதனால்தானே தியாகபூமி என்று சொல்கிறார்கள்”, என்று சம்பு சாஸ்திரி இறுதியில் சாவித்திரியிடம் கேட்கிறார்.

“சுதந்திரத்திற்காகத்தான் தியாகம் செய்வே; அடிமைத்தனத்திற்காக ஒரு போதும் தியாகம் செய்யேன்”, என்னும் சாவித்திரியின் ஆணித்தரமான பதில்கள் மிக வீரியம் மிக்கவை. படிக்கையில் நம்மைப் புல்லரிக்கச் செய்பவை என்றால் அது மிகையில்லை.

__________________

தியாகபூமி
சமூக நாவல்
அமரர் கல்கி
அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் கிடைக்கும்
அனைத்துப் பதிப்பகங்களிலும் நிச்சயம் கிடைக்கும்
விலை ரூபாய். பதிப்பாளரையும் அச்சுத் தரத்தையும் பொருத்தது :)


17 Jun 2013

வெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி


ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கவேண்டுமென்று ஒரு ஆசை சில நாட்களாகவே இருந்து கொண்டேதான் இருக்கிறது. பொதுவாகவே எல்லோரும் சொல்லிச் சிலாகிக்கும் ஒரு பெயர் தஸ்தயேவ்ஸ்கி. அதில் அப்படி என்னதான் இருக்குமென அறியும் ஆர்வம் எந்தக்கணம் உட்புகுந்ததெனத் தெரியவில்லை. முழுக்க முழுக்க லேபிளை மட்டுமே வைத்து வாங்கிய சரக்கு இது. ஒரு குறு நாவல்தான் எனினும் இப்புத்தகம் தந்த தாக்கம், ஒரு உணர்வு சமீபத்தில் நான் வாசித்திருந்தவற்றில் எதிலும் கிடைத்திருக்கவில்லை.

நிறைய நண்பர்கள் வேண்டும், பெண்கள் நம்மிடம் சரி சமமாக, தோழமையுடன் பேச வேண்டும். இதெல்லாம் பொதுவாகவே இளைஞர்களுக்கு இருக்கும் ஆசைகள், விருப்பங்கள். ஆனால் நாம் காணும் அனைவருமே ஒருபோல இருப்பதில்லை. நாமும் எல்லோரிடமும் ஒரேபோல் நடிப்பதுமில்லை. எல்லோரிடமும் இருக்கும் அவரவர் சுயம் வெளிப்படும் தருணங்களில் உடனிருப்பவர் எவ்வாறு பதில்வினையாற்றுகிறார் என்பதில்தான் நட்பு காதல் போன்ற மற்று உறவுகளும். மனம் முழுக்க அன்பும், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத ஒரு சுபாவமும் கொண்டவருக்கு இப்படியாக உறவுகள் அமைவது மிகச் சிரமமே.

இந்தக் கதையில் தஸ்தாயேவ்ஸ்க்கியின் நாயகன் இதுபோலொருவன் தான். பீட்டர்ஸ்பர்க் நகரில் எட்டு ஆண்டுகளாக வசித்தும் ஒருவரைக் கூட நண்பராக பெற்றிடாத ஒருவன். தன்னைத்தான் சோகத்திலோ அன்று கண்ட எதோ ஒரு காட்சியின் மகிழ்ச்சியிலோ ஆழ்த்திக்கொண்டு தனக்கு யாரும் நண்பர்களாய் இல்லததினால் அங்கிருக்கும் தெருக்களில் நடமாடும் ஒவ்வொருவரையும் கவனித்தவாறே, அந்த இயற்கையில் தன்னை கரைத்துக் கொண்டு நடமாடுகிறான். எல்லோரும் அவரவர் கிராமத்துக் குடிலுக்குச் செல்வது இவனுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லோரும் தன்னைப் பிரிவதாக எண்ணிக் கொள்கிறான். “என்னுடன் வா” என்றழைக்க யாருமில்லாத தனிமை இவனை மேலும் நோகடிக்கிறது.

இது போலான ஒரு இரவு நேர நடை பயணத்தில் இளம் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அழுதவாறு இருக்கிறான். ஆறுதல் சொல்லலாமா என்றெண்ணியவன் குறைந்தபட்சம் அவள் ஏன் அழுகிறாள் என்றாவது கேட்கலாமென நெருங்கிச்சென்று தயக்கத்தினால் தன் முடிவைக் கை விடுகிறான். அவள் அழுதவாறே நடந்து செல்கிறாள். ஒரு முரடனொருவன் அவளைத்தொடர்ந்து செல்ல இவன் அவளை காப்பாற்றுகிறான். முதல்முறையாக ஒரு பெண்ணிடம் பேசும் வாய்ப்பையும் பெறுகிறான். அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவள் அழுத காரணத்தைக் கேட்கிறான். ஆறுதல் கூறுகிறான். தான் அவளுடன் பேசியதில் மகிழ்ச்சி என்றும், இதுவரையிலும் பெண்களிடம் பேசிப் பழகியதில்லை என்றும் கூறுகிறான். அவளுக்குப் பிடித்தமானவனாக இருக்க விரும்புவதாகவும் கூறுகிறான். நாளையும் அதே இடத்தில் அவளுக்காக காத்திருப்பதாக சொல்கிறான். தன்னைக் காதலிக்ககூடாது என்னும் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் அவளும் அடுத்தநாள் அங்கு வருவதாக் உறுதியளிக்கிறாள். இப்படியாக முதல் நாள் இரவு முடிகிறது.

அடுத்த நாள் அவள் வருகிறாள். அவள் வருகையில் மகிழ்வுற்றவன் தன்னைப்பற்றி அவளிடம் கூறுகிறான். ஒரு நல்ல நண்பர்களைக்கூட பெற்றிடாதவன் என்றும் தன் வாழ்க்கை நிலையைப்பற்றியும் தனிமையின் கொடுமையில் வாழ்வதாகவும் கூறுகிறான். அவள் தன்னை நாஸ்தென்கா என அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனக்கு ஆதரவென்று ஒரு பாட்டி மட்டும்தான் என்றும், கண் தெரியாத பாட்டி, நாஸ்தென்கா பெரியவளானதும் தன் ஆடையை அவள் ஆடையோடு ஊக்கு குத்திக்கொண்டு எங்கும் போக விடமாட்டாள் என்றும் புத்தகங்கள் படிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் கூறுகிறாள். அந்த சமயத்தில் தங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஒருவரைத் தான் நேசித்ததாகவும், ஒரு வருடத்திற்குப்பின் வந்து தன்னை அழைத்துப் போவதாய் சொல்லியிருக்கிறார் என்றும் அவருக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறாள். அவர் இன்னும் வராததை எண்ணி வருந்துகிறாள். அவருக்கு ஒரு கடிதம் எழுதித்தந்தால் அவரிடம் கொண்டு சேர்ப்பதாகச் சொல்கிறான் இவன். அவளுக்குப் பிடித்தமானவனாக, ஒரு நண்பனாக இரண்டாம் இரவும் முடிகிறது. பகலிலும் கூட அடர்ந்த தனிமை இருளில் வசித்திருப்பவனுக்கு தன் வாழ்வில் ஒரு பெண்ணின் வருகை, இரவில் அவளின் சந்திப்பு அவனது இரவுகளை உறக்கமற்றதாக்குகிறது. வெறும் இரவுகள் அவனுக்கான வெண்ணிற இரவுகளாகிறது.

மூன்றாம் இரவும் இருவரும் சந்திக்கின்றனர். அவருக்காக காத்திருக்கின்றனர் இருவரும். அவர் அன்றும் வரவில்லை. இருவருக்குமிடையேயான புரிதல் இன்னும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் கூறுகிறாள் “என்மீது நீங்கள் காதல் கொண்டுவிடாமல் இருப்பதால்தான் நான் உங்களை மிக நேசிக்கிறேன்”. அவளறியாமலே அவளுக்கு அவன் மீது ஒரு பற்றுதல் வந்து விடுகிறது. தானும் அவ்வாறு உணர்வதாய்க்கூறி இருவரும் நாளை சந்திப்பதாய்க் கூறி பிரிகின்றனர்.

நான்காம் இரவும் வருகிறது. இத்தனைக்குப்பிறகு அவளின் விம்மல்கள் கண்டு அவன் நொடிந்து போகிறான். அவளைக் காதலிப்பதாக உரைக்கிறான். பல குழப்பங்கள் அவளை சூழ்கின்றன. இருந்தும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கிறாள். அந்த சமயத்தில் அவளின் காதலன் வந்து நாஸ்தென்காவை அழைத்துச்செல்கிறான்.

இருவிதமான முடிவுகளே சாத்தியம் எனும்போது, அவை தெரிந்திருந்தும் அந்த நான்காம் இரவின் பக்கங்களைப்படிக்கும்போது ஏதோ ஒரு கோழிக்குஞ்சினை கையில் வைத்திருப்பதான ஒரு பரபரப்பு உணர்வு. இறுக்கிப்பிடித்தால் இறந்துவிடுமோ என்றொரு மனநிலை. அவள் காதலனோடுதான் சேர்கிறாள் என்றபோதும், இவன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டதை எண்ணும் தருணங்களில் என்னையறியாமல் கலங்கி விட்டேன். இதை வைத்து எத்துனையோ சினிமா பார்த்திருப்போம். இருந்தும் கூட எழுத்தில் அந்த வலியை உணரச்செய்தது மிக அருமை. அதுவும் அவள் காதலன் முன்பாக இவனை வந்து இறுக்க அணைத்துக்கொள்வாள் நாஸ்தென்கா. அப்போது வந்த உணர்வை எழுத்தில் சொல்வது மிகக்கடினம். உணரப்பட வேண்டியதது.

நாஸ்தென்கா, எங்கோ பீட்டர்ஸ்பெர்க் நகரில் உன்னையே எண்ணி வாழ்ந்த ஒருவனின் ஆன்மாவாக என்னை இப்போது கருதுகிறேன். உன்னை நான் ஒருபோதும் காதலித்து விடக்கூடாது என்று சொல்லி எந்தன் ஏமாற்றத்தை தடுத்ததிலாகட்டும், பெண்கள் குறித்த எனது தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்து என்னை ஓர் ஆணாக உணரச்செய்ததிலாகட்டும், எந்தன் தனிமைப் பிணியைப் போக்கி என்றும் மறவா இனிய நினைவுகளைக் கொடுத்ததிலாகட்டும், எந்தன் காதலை உணர்ந்து இறுக அணைத்த அணைப்பிலாகட்டும், எனது அருமை நாஸ்தென்கா இன்றும் இப்போதும் ஒவ்வொரு கணமும் என் நினைவுகளில் நீ நிழலாடுகிறாய், உன்னை அதிகமதிகம் நேசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

குறுநாவல் | ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி | மொழிபெயர்ப்பு | ரா. கிருஷ்ணையா | நியூ செஞ்சுரி வெளியீடு | பக்கங்கள் 94 | விலை ரூ. 70

இணையத்தில் வாங்க: டிஸ்கவரி

16 Jun 2013

ரஸவாதி - பௌலோ கொய்லோ

சிறப்பு  பதிவர் - கிருஷ்ணகுமார் ஆதவன்

ஆடு மேய்க்கும் இடையனான சிறுவன் சந்தியாகு, புதையலிருக்கும் பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணம் நாவலின் கதைக் கரு. இடையிடையில் அவன் சந்திக்கும் மனிதர்கள், நிலப்பரப்புகள், சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவனது பார்வையை விரிவுபடுத்துவதாக இருக்கின்றன. பயண முடிவில் சடுதியில் நேர்ந்துவிடும் ஒரு சிறிய திருப்பத்தின் மூலம் நாவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

பௌலோ கொய்லோவின் சிறந்த நாவல்களில் ஒன்று இது. உலக  அளவில் அதிகம் விற்பனையான நாவல்களில் ஒன்றும்கூட. பொன்.சின்னத்தம்பி முருகேசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகத்தார் இதை தமிழில் வெளியிட்டுள்ளனர். ரஸவாதி - அடிப்படையில் ஒரு தத்துவார்த்தமான நாவலாக இருந்தாலும் மீயதார்த்த பாணியில் எழுதப்பட்டிருக்கும் கதையைக் கொண்டுள்ளது. கதையின் மையத்தில் உள்ள தத்துவம் படிம அமைவிலான சுட்டலாய் ஆங்காங்கே பேசப்படுகிறது.

தேக்கடி ராஜா — எம்.பி. சுப்பிரமணியன்

சிறப்பு பதிவர் : சரவணன்
    
    

    முதலில் இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்— நள்ளிரவு; தலைக்கு மேலே பௌர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது; அப்பொழுது—
    ...அந்தக் குன்றில் இருந்த சிறிய வீட்டுக்குள் போய்ச் சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு விளக்குடன், பாழடைந்த வீட்டின் பக்கமுள்ள மேட்டினருகில் சென்றது அவ்வுருவம்.

      இதற்குள் பெரிய கறுத்த உருவங்கள் அந்த மனிதனைச் சுற்றிவர ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் அந்தக் குன்றின் உச்சியிலும், சுற்றிலும் சிறியதும் பெரியதுமான கணக்கற்ற யானைகள் தோன்றின. ஆமாம் யானைகள்தான்! நான் எண்ணியதுபோல பேயோ பிசாசோ அல்ல. மனித உருவத்தை நாங்கள் இப்பொழுது பார்க்க முடியவில்லை. சுற்றியிருந்த யானைகள் அவனை மறைத்துவிட்டன. அந்தக்கூட்டத்திலிருந்த ஆண் யானைகளின் தந்தங்கள் சந்திர ஒளியில் மூன்றாம் பிறை மதியைப் போல பிரகாசித்தன. கூட்டத்தின் நடுவே ஒரு புதிய ஒளி தோன்றியது. அந்த ஒளி வருவதைக் கண்டதும் அந்த அதிசய மனிதன் எதற்கோ தீபாராதனை காட்டுகிறான் என்று ஊகித்தேன்.
     அதே சமயம் சுற்றியுள்ள யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கி வீறிட்டன. காடே அதிர்ந்தது. என் உடல் நடுங்கியது. பயத்தால் அல்ல, அந்த யானைகள் பிளிறுவதில் இருந்த வீரத்தையும் கம்பீரத்தையும் கண்டுதான். பல வீரர்கள் சேர்ந்து வீர கர்ஜனை செய்யும் காட்சிதான் என் மனத்தில் தோன்றியது. இம்மாதிரி ஓர் அபூர்வமான காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. செயலற்று நின்றுகொண்டிருந்தேன். குன்றிலிருந்த யானைகள் எல்லாம் மறைந்துவிட்டன. அந்த மனிதனையும் காணவில்லை.
     என்ன ஒரு சிலிர்ப்பூட்டும் காட்சி! இப்போது இதைக் கேளுங்கள்; இது ஒரு உண்மைச் சம்பவம்! நடந்த இடம்: தேக்கடி; ஆண்டு: 1950-களில்; பார்த்தவர்- எம்.பி.சுப்பிரமணியன். பார்த்ததோடு நில்லாமல் இந்த அதிசய சம்பவத்தின் பின்னணியை ஆராய்ந்து ஒரு அருமையான சிறுவர் நாவலாக எழுதிவிட்டார். அதுவே ‘தேக்கடி ராஜா’. என்னிடமிருக்கும் பதிப்பு வெளியான ஆண்டு 1996. முதல் பதிப்பு வெளியான ஆண்டு தெரியவில்லை. என் அம்மா இக்கதையைத் தான் சிறுமியாக இருந்தபொழுது ’50 களின் இறுதியில் ஏதோ பத்திரிகையில் தொடராகப் படித்திருப்பதாகக் கூறுகிறார். பத்திரிகை கண்ணன் அல்லது  ஒருவேளை விகடனாக இருக்கலாம்.

15 Jun 2013

பிஞ்சுகள் - கி. ராஜநாராயணன்

சிறப்பு பதிவர் : ஸ்வப்னா அரவிந்தன்

கி.ராஜநாராயணனின் எழுத்து யாருக்குமே பிடிக்கும். எளிமையாகக் கதை சொல்பவர், நகைச்சுவை உண்டு, படித்து முடித்தபின் யோசித்துப் பார்ப்பதற்கான விஷயமும் இவரது கதைகளில் உண்டு. கி.ரா. எழுதிய  'கதவு', 'கோமதி' என்ற இரு சிறுகதைகளும் மறக்க முடியாதவை. பிஞ்சுகள் என்ற இந்தக் கதையை இப்போதுதான் படிக்கிறேன்.

'குழந்தைகள் குறுநாவல்' என்று முதல் பக்கத்தில் போட்டிருப்பதைப் பார்க்கும்போது இவர் எழுதியிருப்பது குழந்தைகளுக்கான கதை என்று தெரிகிறது. "இது கையெழுத்துப் பிரதியிலேயே 1978ஆம் ஆண்டின் சிறந்த படைப்புக்குரிய 'இலக்கியச் சிந்தனை' பரிசு பெற்றது,' என்று கதைக்கு முந்தைய பக்கத்தில் போட்டிருக்கிறது, நல்ல கதைதான் என்று நம்பிப் படிக்கலாம். அன்னம் வெளியீடு (1979).



14 Jun 2013

காட்டில் ஒரு மான்- அம்பை


காட்டில் ஒரு மான்
அம்பை
காலச்சுவடு பதிப்பகம்
Photo courtesy: Amazon

குறிப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் நான் படிக்கும் புத்தகத்தில் தெளிவைக் காணவே எழுதப்பட்டது என்பதுதான். எந்த ஒரு சர்ச்சையையும் உருவாக்கும்  நோக்கம் இல்லை. இதன் நோக்கமே அதுதான் என்று நீங்கள் வாதிட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்வதற்கு இல்லை - என் மனசாட்சி எனக்குத் தெரியும்.

எல்லாரும் கருத்து சொல்கிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள். விளக்கம் கேட்டால் உண்மையை நோக்கி ஓட வேண்டும் என்று சொல்கிறார்கள். சரி, ஒருத்தர் அப்படிச் சொல்கிறாரே, அந்தக் கருத்து தப்பில்லையா என்று கேட்டால், "அது அவருடைய கருத்து," என்று பதில் வருகிறது. "அதற்காக அதை நியாயம் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?" என்று கேட்டால், "உனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக அவர் அதை எழுதாமல் இருக்க முடியாது, இல்லையா?" என்று பதில் வருகிறது. 

அதுவும் சரிதான் என்று தற்போதைக்கு ஏற்றுக் கொள்வோம்.




13 Jun 2013

நாடகத்தமிழ் - பம்மல் சம்பந்த முதலியார்

அது ஒரு முடிவுறாத மதிய நேரம். முந்தைய நாள் வரை அலைந்ததில் உடல் களைப்பைத் தாண்டி எழுந்துகொள்ள முடியாத அசதியில் ஆய்ந்திருந்தேன். விழித்திருந்தேனா தூக்கத்தில் கனவு காண்கிறேனா என அறிய முடியாத நிலை. அவ்விதம் கிடப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். முழுவதும் விழிக்க முடியாமல் காலையா மாலையா எனத் தெரியாத நிலை. அரைவிழிப்பில் எதிரே ஓடிக்கொண்டிருந்த டிவியைப் பார்த்தேன். ஷேக்‌ஸ்பியரைப் பற்றி ஒரு ஆவணப்படம். ஷேக்ஸ்பியர் என உண்மையில் யாராவது இருந்தார்களா? அடிதடிக்குப் பெயர் போன மார்லோ எனும் நாடக ஆசிரியர் தான் ஷேக்ஸ்பியர் எனும் பெயரில் எழுதினாரா என மிக விரைப்பாக டை கட்டிய ஆசாமி பேசிக்கொண்டிருந்தார். நான் மீண்டும் தூக்கத்துக்குப் போனேன்.
1965இல் சினிமா மோகம்  தலைவிரித்தாடியபோது நாடகத்துக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவழித்த பம்மல் சம்பந்தம் முதலியார் தனது நெருக்கமான உறவினரிடம் ஒரு நாடகத்தை சொல்லிக்கொண்டிருந்தார். கண்பார்வை மங்கிய முதலியார் நாடகக் காட்சிகளையும், நடிகர்களின் முகபாவங்களையும், மேடை அமைப்பையும், வசனங்களையும் சொல்லச் சொல்ல அந்த நபர் எழுதி வந்தார். மரப்பாவை போல சொற்பாவை அமைத்தவர் நாடகத்தை நவீனமயமாக்கியது மட்டுமல்லாது, நாடகத்தமிழ் எனும் இயலை மீட்டெடுத்து பல நூல்களை வெளியிட்டவர்.



12 Jun 2013

Roseanna (A Martin Beck Novel) - Sjöwall & Wahlöö

சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)



பெங்குவின் இந்தியாவின் பதிப்பாசிரியராக டேவிட் டாவிதார் இருந்த காலத்தில், தி ஹிந்து நாளிதழின் சண்டே மேகசினில் ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம் அல்லது எழுத்தாளரைப் பரிந்துரைத்து பத்தி ஒன்றை எழுதி வந்தார். அதில்தான் நான் முதலில் பெர் வாஹ்லூ, மாயி கொவால் ஆகிய இருவரையும், அவர்கள் எழுதிய "Laughing Policeman" என்ற நாவலையும் அறிந்தேன். அந்தப் புத்தகம் இங்கேயே கிடைத்தது என் அதிர்ஷ்டம். அதை வாசித்து முடித்ததும் இந்தத் தொடரின் பிற நாவல்களைத் தேடித் தேடி வாசித்தேன். இருவரும் இணைந்து எழுதிய பத்து புத்தகங்களையும் கண்டெடுத்து வாசித்த பிறகுதான் ஓய்ந்தேன்.

இந்தத் தம்பதியர் எழுதிய முதல் நாவல்தான் ரோஸன்னா. ஸ்வீடனில் உள்ள ஏரிகளில் ஒன்றில் தூர்வாரும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒரு இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண் உடலில் உடையேதும் இல்லை. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. ஆனால் அவள் யார் என்பதையோ எப்போது கொலை செய்யப்பட்டாள் என்பதையோ உள்ளூர் போலீஸ்காரர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தலைமையகத்திலிருந்து இன்ஸ்பெக்டர் பெக் வரவழைக்கப்படுகிறார், அவரிடம் இந்த மர்ம வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர் பெக் மற்றும் அவரது சகாக்கள் இந்தக் கொலை வழக்கை எப்படி துப்பறிகிறார்கள் என்பதுதான் நாவலின் மையம்.

11 Jun 2013

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் – வா.மு கோமு


எல்லோருக்கும் குழந்தைப்பருவம் தாண்டி இளமைக்கு வருவதென்பது பல புரியாத புதிர்களைக்கடந்து வரும் விஷயமாகத்தான் இருந்திருக்கும். எல்லோர் வாழ்விலும் பள்ளியை நேசிக்கச்செய்ய ஒரு பெண்ணும், பள்ளியை வெறுக்கச்செய்ய ஒரு டீச்சரும் நிச்சயம் இருப்பர். இருந்தாலும் நம்முடனேயே இருந்து கொண்டு நம்மை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களைக் கண்டு அவர்கள் செய்வதை செய்து நம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்வோம். அதே போல எல்லார் வாழ்விலும் சொந்தத்திலோ பக்கத்து வீடுகளிலோ திருமணமாகாத, திருமணம் செய்து கொள்ள விரும்பாத ஒரு சித்தப்பனோ மாமனோ இருக்கலாம். அவர்கள் கதை இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும். “என்னடா வாழ்க்கை இது” எனப் புலம்புவார்கள். நமக்கொன்றும் புரியாதெனினும் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதும். எப்படியும் ஒரு ஐஸ்க்ரீமுக்கோ, சாக்லேட்டுக்கோ துட்டு நிச்சயம்.

வாமு கோமுவின் கதைகளின் பிரதானம் மொழிநடை. அதுவும் கொங்குப் பகுதிகளில் வாழ்ந்துவிட்டு அல்லது ஓரிருநாள் தங்கிவிட்டு அங்கிருக்கும் பழக்கவழக்கங்களைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் நிச்சயம் அந்த பூமியை, மக்களின் இன்மையை உணர்வார்கள். இவரின் கதைகளைப் படிக்கும்போது புத்தகத்தின் வாயிலாக ஈரோட்டுக்கோ அவிநாசிக்கோ சென்று தொப்புக்கடீர் என்று விழுந்து விட முடிகிறது. அத்தனை எளிமையான, ஆர்வத்தை தூண்டும் எழுத்து.

10 Jun 2013

ஸ்ட்ரீட் லாயர் – ஜான் கிரஷாம்

சிறப்பு பதிவர்: சரவணன்

ஜான் கிரஷாம் வழக்கறிஞர்களையும் வழக்குகளையும் மையமாக வைத்து லீகல் திரில்லர் எழுதுபவர். இவருடைய புத்தகங்களில் சற்றே வித்தியாசமானது ‘ஸ்ட்ரீட் லாயர்’. (மேலும் வித்தியாசமான- காமெடி- புத்தகமான ‘ஸ்கிப்பிங் கிருஸ்மஸ்’ தவிர).

இப்புத்தகத்தின் கதாநாயகன் மைக்கேல் ப்ரோக், வாஷிங்டன் நகரில் அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய சட்டக் குழுமமான டிரேக் அன் சானி-யில் பணியாற்றுகிற அதிபுத்திசாலியான, பெரும் வணிக நிறுவனங்களுக்காக ஆஜராகிற, ஆன்ட்டி-ட்ரஸ்ட் லாயர். இன்னும் மூன்றே ஆண்டுகளில் அந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிவிடும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பவன். என்ன, அவனது மணவாழ்வுதான் ஊசலாட்டத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் ஒருநாள் வீடற்றவன் ஒருவன், கையில் துப்பாக்கியோடு அலுவலகத்துக்குள் நுழைந்து மைக்கேல் உட்பட ஆறு பேரைப் பணயக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொள்கிறான். தன்னை வெறுமனே ‘மிஸ்டர்’ என்று அழைக்கச் சொல்லும் அவனுக்குக் கோரிக்கைகள் எதுவும் இல்லை. மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் வழக்கறிஞர்களுக்கு ஏழைகள், வீடற்றவர்கள் மீது ஏதாவது அக்கறை இருக்கிறதா?, என்று கேள்விகளால் துளைக்கிறான். பிறகு போலீசாரால் அனைவரும் மீட்கப்படுகிறார்கள்— ஒரு அதிரடி நடவடிக்கை மூலமாக.

இந்தச் சம்பவம் மைக்கேலின் வாழ்க்கையைப் ‘புரட்டிப் போட்டுவிடுகிறது’. யார் இந்த ‘மிஸ்டர்’ என்று ஆராயப்புகும்போது அவனுக்குக் கிடைப்பது சில அதிர்ச்சித் தகவல்கள். ‘மிஸ்டரின்’ நிஜப்பெயர் டி வான் ஹார்டி என்றும், அவன் குடியிருந்த ஒரு மலிவான இடத்திலிருந்து அவனையும், இன்னும் பலரையும் காலி செய்ததில் தனது நிறுவனத்துக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் தெரிய வருகிறது. அதுவும் அப்படிக் காலி செய்யப்பட்டவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல, டில்மான் கான்ட்ரி என்ற முன்னாள் பெண்-தரகன் ஒருவனுக்கு வாடகை கொடுத்துவந்தவர்கள் என்று தெரியும்போது கொந்தளிப்பாக உணர்கிறான். இதுவரை அவன் சிறிதும் அக்கறை செலுத்திக் கவனித்திராத சாலையோர மக்களின் உலகம் அவனுக்கு அறிமுகம் ஆகிறது. காலி செய்யப்பட்ட லோன்டே பர்டன் என்ற பெண்ணும் அவளது நான்கு குழந்தைகளும் வீடில்லாமல் ஒரு பழைய காருக்குள் இரவைக் கழித்து, மூச்சுத் திணறி இறந்துவிடுகிறார்கள். முந்தைய நாள்தான் மைக்கேலின் கையில் உயிர்ப்புடன் இருந்த குழந்தை ஒண்டாரியோ மரணித்து விறைத்துக் கிடப்பது நம்மையே உலுக்குகிறது. அதை மைக்கேலால் ஜீரணிக்கவே முடிவதில்லை. தான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எவ்விதத்திலும் நியாயமானதே அல்ல என்று உணர்கிறான். 



9 Jun 2013

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் - பிரபு சங்கர்


ஆம்னிபஸ் வரலாறில் மிக முக்கியமான வாரம் இது; குறிப்பாக எனக்கு. கர்மசிரத்தையாக கடிவாளம் கட்டினாற்போல் புத்தகங்களைப் பரிந்துரை செய்து கொண்டிருந்த நாங்கள், இந்த வாரத்தில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் விதம், அந்த அனுபவங்கள், அதற்கு உதவிய புத்தகங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

"டிவி பாத்துக்கிட்டே குழந்தைகள் தூங்கி விழுகிற நாட்டில் இப்படியும் ஒரு அம்மா" என்று தியானா எழுதிய பதிவைப் பற்றி குறிப்பிட்டார் நண்பர். எங்கள் வீட்டுச் சுட்டி சிலநேரங்களில் இப்படித்தான் இருக்கிறான் என்பதால், “பளார், பளார்” ஓசைகள் அவர் சொன்னதைப் படித்ததும் பின்னணியில் எனக்குக் கேட்டது.

லேனா தமிழ்வாணனிடம் அவர் எழுதிய “ஒரு பக்கக் கட்டுரைகள்” குறித்து ஒருவர் கேட்டாராம், ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதி அறிவுரையா சொல்லித் தள்ளறீங்களே, யாராவது ஒருத்தராவது இதனால கொஞ்சமாவது மாறியிருக்காங்களா?”, 

லேனா கூலாக  “கண்டிப்பா, நான் நிறைய மாறியிருக்கேனே”, என்றாராம்.

இதை இங்கே நான் குறிப்பிடும் காரணம், எங்கள் வீட்டுச் சுட்டி இப்போதுதான் நாங்கள் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் கட்டத்திற்கு வந்திருக்கிறான். ஆகவே, இனி கதை சொல்லிகளாக நானும் என் மனைவியும் மாறும் அவசியத்தை நிறையவே உணர்த்துகிறது இந்த வாரத்து ”பெற்றோர் - குழந்தைகள்” பதிவுகள். ஆக, இந்த சிறப்பு வாரம் யாருக்கு உதவியதோ இல்லையோ, எனக்கு நிறையவே உதவியிருக்கிறது. அதற்காக, இந்த சிறப்பு வாரக் கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் எங்கள் ஆம்னிபஸ் சங்கத்து சிங்கம் அண்ணன் நடராஜனுக்கு நன்றிக்கு உரியவன் ஆகிறேன்.

இந்த வாரத்துப் பதிவுகள் வாயிலாக குழந்தைகளுக்குக் கதை சொல்லும் முறை சார்ந்த சூட்சுமங்களை நான் நிறையவே கற்றுக் கொண்டேன் எனலாம். கூடவே, புத்தகப் பரிந்துரைகளும் கிடைத்தன. நம் குழந்தைகளை எப்படிப் புத்தகப் பித்தர்களாக உருவாக்குவது என்பது குறித்துப் பேசிய என்.சொக்கனின் பதிவு இந்த வாரத்தின் இன்னொரு ஹைலைட்.

என் பிள்ளைப் பருவத்தில் எனக்கு தாத்தா, பாட்டி கதை சொல்லியதில்லை. அம்மா, அப்பா கதை சொல்லிய நினைவில்லை. பாட்டி வீட்டிலும் சரி, எங்கள் வீட்டிலும் சரி எப்போதும் வீடெங்கும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும். எல்லா வயதினருக்கும் புத்தகங்கள் உண்டு. வாண்டுமாமாவும் இருப்பார், ராஜேந்திரகுமாரும் இருப்பார். பூந்தளிரும் இருக்கும், புஷ்பா தங்கதுரை நாவலும் இருக்கும். 

மூணாப்பு படிக்கும்போதே ராணிகாமிக்ஸ், கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா என்று எல்லா புத்தகங்களும் நமக்குக் கிடைத்துவிடும். எனவே நினைவு தெரிந்து கதை கேட்டு வளர்ந்ததை விட கதை படித்தே வளர்ந்தோம் எனலாம் (என்னே பெருமை என்னே பெருமை. ஓகே ஓகே).

மூன்று வயது அகில் இப்போது எது யானை எது பூனை என்று கண்டறியும் புத்தகங்களைத்தான் கிழித்துக் கொண்டிருக்கிறான்.  மேலே நான் சொன்னவைகளுள் கோகுலம் தவிர்த்து மீதமிருக்கும் புத்தகங்கள் இப்பவும் வருகின்றனவா எனத் தெரியவில்லை. எனவே, எனிவே... அந்தப் புத்தகங்களைத் தேட இன்னும் குறைந்தது நான்கு வருடங்களேனும் இருக்கிறது என்பதால் இப்போதைக்கு நாம் படித்து அவனுக்குச் சொல்லத்தக்க புத்தகம் ஏதும் தேடுவோம் என்று தேடியதில் ‘கிழக்கில்’ அகப்பட்டது ‘ஆன்மிக ஸ்வீட் ஸ்டால்’ எனும் இந்தப் புத்தகம். 

இரண்டு பக்கத்துக்கு ஒரு கதை என்று நூற்று நாற்பத்து சொச்ச பக்கங்களில் சுமார் எழுபது கதைகள். குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் ரெகுலராக எழுதும் பிரபு சங்கர் கைவண்ணத்தில் தொகுக்கப்பட்டவை இக்கதைகள். ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு நீதி. உம்: “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் தேடாதே, ஏற்றுக் கொண்ட கடமையை செவ்வனே செய்”. 

நாம் நம் வயதுக்கு இந்தப் புத்தகத்தைப் படித்தால், “வாட் எ சில்லி புக் மேன்” என்றுகூட தோன்றலாம். எனினும் நிதானமாகப் படித்தால் இதிலுள்ள கதைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு அழகான நீதி சொல்லும் கதைகள். 

நாம் காலப்போக்கில் மறந்து போன நீதிக் கதைகள் இதில் நிறைய. சில கதைகள் பெரிய குழந்தைகளுக்குப் பொருந்தும். இடையிடையே குட்டிச் சுட்டிகளுக்கும் சொல்லவல்ல கதைகள் உண்டு. சாய்ஸ் ஈஸ் யுவர்ஸ்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் பொருள் தேடும் ஓட்டத்தில் பெற்றோர் இருவரும் இரு திசைகளில் ஓடிக்கொண்டிருக்க நம் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளைச் சொல்ல இங்கே யாரும் இல்லை. அதனால் தொலைக்காட்சி குழந்தைகளுக்கு இங்கே முக்கிய கம்பானியன் ஆகிப்போகிறது.

கீழே நான் கொடுத்திருக்கும் இரண்டு திரைப்படம் சார்ந்த கதைகளுக்கும் அடிப்படை நாம் எல்லோரும் பெரும்பாலும் அறிந்த நீதிக்கதைகளே.  

முதல் கதை:

நண்பரின் வீட்டிற்குப் போயிருந்தேன். ஏதோவொரு நகைச்சுவை தொலைக்காட்சியில் வடிவேலு தோன்றினார்.

வடிவேலு டீக்கடை ஒன்றில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார். அவரிடம் அடுத்தவர் “உனக்கு ஜார்ஜ் புஷ் தெரியுமா, பில் கேட்ஸ் தெரியுமா, பின்லேடன் தெரியுமா என்று உலகப் பிரபலங்கள் குறித்து கேட்பார். இவர் தெரியாது, தெரியாது, தெரியாது என்று சொல்ல; எதையும் தெரியாத முட்டாளா இருக்கியே என்று அடுத்தவர் வடிவேலுவைக் கிண்டலடிப்பார்.

“உனக்கு முனுசாமியைத் தெரியுமா?”

“தெரியாது. யார் அந்த முனுசாமி?”

வடிவேலு வாயைத் திறக்குமுன் நண்பரின் ஐந்து வயது அக்கா மகன், “அவன்தாண்டா உன் பொண்டாட்டியை வெச்சுட்டு இருக்கான்”, என்றான்.

வீடே விழுந்து விழுந்து சிரித்தது, நானும்தான்.

கதை இரண்டு:

”ரன்” திரைப்படத்தில் சிறுநகரம் ஒன்றில் தன் அப்பாவை எல்லா விதத்திலும் அவமானம் செய்துவிட்டு, பிழைப்பு தேடி சென்னைக்கு வருகிறார் விவேக். இந்தப் பெருநகரம் அவரை எல்லா விதத்திலும் வஞ்சிக்கிறது; அவரை கோவணத்தோடு சாலையோரத்திற்குத் தள்ளுகிறது. அவர் சந்திக்கும் ஒவ்வொரு ஏமாற்றமும் சிரிப்புத் தோரணம் கட்டப்பட்டு, நகைச்சுவையாகக் காட்டப்படுகிறது. கவனிக்கத்தக்க பன்ச் டயலாகுகள் அங்கங்கே (உம்.: காக்காக் கறி துன்னா காக்கா மாதிரி கொரல் வராம உன்னீகிர்ஸ்னன் போலவா வரும்?). 

கடைசியில் தன்னிடம் மிஞ்சும் கோவணத்துடன் சாலையோர சாமியார் அவதாரம் எடுக்கிறார் விவேக். "அப்பா பேச்சைக் கேளு; அம்மாதான் எல்லாம்" என்று அருளுரை வழங்கிக் கொண்டு பக்தகோடிகள் மீது விபூதி வீசுகிறார் என அவரது கதை நிறைகிறது.

இந்த இரண்டு காமெடிக் காட்சிகளிலுமே நம் குழந்தைகள் நீதியை விட்டுவிட்டு பன்ச் டயலாகுகளை மட்டும் நினைவில் வைத்திருப்பதுதான் இன்றைய உச்சபட்சக் கொடூரம்.

சரி, அது ஒரு பக்கம் கிடக்கட்டும். அந்த இரண்டு காமெடி சீக்வென்ஸ்களுக்கும் உரிய ஒரிஜினல் நீதிக்கதையை உங்களால் கண்டறிய முடிந்ததா? 

ஆன்மிக ஸ்வீட் ஸ்டால் | பிரபு சங்கர் | கிழக்கு | 144 பக்கங்கள் | விலை ரூ.60/- 

8 Jun 2013

பெற்றதால் கற்றது - கதை சொல்லும் கலை - அனுஜா

குழந்தை வளர்ப்பு ஒரு வாழ்க்கைக்கலை. கற்றது கைம்மண்ணளவு. [“பிள்ளைவளர்ப்பு இவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு ஏன் எனக்கு முன்னாலேயே சொல்லவில்லை” என்று என்னைப் பெற்றவளிடம் கேட்டு, “நான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்” என்று அவர் வாழ்க்கைச் சக்கரம் பற்றி எனக்கு பல்பு கொடுத்த கதை இங்கே வேண்டாம்…!] நான் எழுதப்போவதைப் பற்றி என் இரு குழந்தைகளோடு விரிவாகக் கலந்துரையாடி, குழந்தைகளின் அனுமதி/மறுபார்வை பெற்றே அனுப்பப் பட்டிருக்கிறது!  எதற்கும் இருக்கட்டும் என்று அனுபவத்திலிருந்து முன்னெச்சரிக்கைக் குறிப்புகள்:

1.    பெற்றவரின் கல்வி எப்போதுமே முடிவதில்லை! ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை, என் மகனோ/மகளோ எனக்குச் சொல்லித் தரப்போகிறார். உண்மையான ஊக்கத்துடன், ஒரு மாணவருக்கான பயபக்தியுடன் மகன்/மகளிடமிருந்து அவர்களைப் பற்றியும் என்னைப் பற்றியுமே கற்றுக் கொள்கிறேன். அப்போது தான், என் மகன்/மகளை தனித்துவம் நிறைந்த இன்னொரு மனிதராக மதிக்கிறேன் என்று பொருள்! என் மகன்/மகள், என் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்பு இல்லை!

2.    என் மகன்/மகள் தனித்துவமானவர் என்றால், என் மகன்/மகளுக்குத் தனித்துவம் தரும் சூழலில் எனது பங்கு என்ன என்பதை, நல்ல இரும்புக்கடையில் எடைபோட்டு உணர்வது அவசியம். நட்புவட்டத்தில் / இணையவெளியில், பலர் பல மாதிரிச் சொல்கிறார்கள்: 'ஏன் உங்கள் மகன்/மகளுக்கு ஹிந்து/தமிழ்ப் பண்பை/பழைமையைப் போதிக்கிறீர்கள்? ஆங்கிலம் மட்டுமே சொல்லிக்கொடுங்கள்! நாத்திகம் மட்டுமே சொல்லிக் கொடுங்கள்!' என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதில் தான் குழந்தைகளோடு கலந்துரையாடுகிறேன். ஏனென்றால், குழந்தைகள் என் செயல்கள், என் உடல்மொழி என்று பலவற்றிலிருந்தும் வாழ்க்கைப் பாடம் கற்கிறார்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...